Header Ads

Jazzdj

கிரிவலம் செல்ல திருக்கழுக்குன்றம் வாரீர்


கிரிவலம் செல்ல திருவண்ணாமலை செல்ல முடியவில்லையா நீங்கள் கண்டிப்பாக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சென்று கிரிவலம் மேற்கொள்ளலாம்.
இரண்டு கழுகுகள் மதியம் 12 மணிக்கு தவறாமல் வந்து உணவு அருந்தி சென்றதால் இந்த திருத்தலத்திற்கு திருக்கழுக்குன்றம் பெயர்க்காரணம் என்று அனைவர்க்கும் தெரியும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்த இந்த திருத்தலமானது  செங்கல்பட்டிலிருந்து 12 கிமி அமைந்துள்ளது.
மலையில் வேதகிரீஸ்வரரும், பக்தவத்சலேஸ்வரர் தாழக்கோயிலில் எழுந்து அருள் புரிகின்றனர். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும்.

சங்கு தீர்த்த குளத்தில் இருந்து 12 ஆண்டுக்கு ஒரு முறை சங்கு வெளிவந்து அனைவரும் கேட்கும் வண்ணம் சத்தம் வெளிவரும். இதுவரை வெளி வந்த சங்குகளை தாழக்கோயிலில் பாதுகாத்து வருகின்றனர்.

கிரிவலத்திற்கு பல இடங்களில் இருந்து வந்து வழி படுவர். கிரிவல பாதை மிக அருமையாக இருக்கும், காவலர்களும் இருப்பார்கள். எந்த வித பயமும் இன்றி சுற்றி வரலாம். 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்தில் சுற்றிவரலாம். வழி எங்கும் பல வழிபாட்டுத்தலங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்டு மனதிற்கு அமைதி நிலவும் வண்ணம் இருக்கும். மனிதன் விருப்புவது அதைத்தானே.

மலை ஏறிச்சென்று வேதகிரீஸ்வரரை வணங்க கண்கோடி வேண்டும். மாலை 3 மணி அளவில் அங்கு சென்றோமெனில் அணைத்து கோவிலையும் வழிபட்டு திரும்பலாம்.
ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், துணிக்கடை என அணைத்தும் உள்ள வழிபாட்டு தளம்.
மிக அதிக கல்யாண மண்டபங்கள் நிறைந்துள்ள இடமும் இதுவே.

No comments:

Powered by Blogger.